கடந்த 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியான கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது; இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை குண்டு வெடித்த பகுதியை சோதனையிட்டு வெடி பொருட்களின் தடயவியல் மாதிரிகளை சேகரித்தனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அவை (IED) ஐ.இ.டி வகையை சேர்ந்தது என தெரியவந்துள்ளதாக என்.எஸ்.ஜி குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், IED வெடி பொருளை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் எடுத்து வந்து இருக்கலாம், அதனை கழிவறைகளில் வைத்து எடுத்து செல்ல முயன்ற போது அவை வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், IED வெடித்ததன் காரணமாக கழிவறையில் இருந்த தண்ணீர் குழாய் உடைந்து நீர் வெளியேறும் போது வெடிமருந்து அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் வெடிபொருள் கலவையை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் வெடி பொருள் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவை IED என தெரியவந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிவிபத்து நடந்தபோது உயிரிழந்த ஒருவர் மட்டுமின்றி மேலும் சிலர் சிசிடிவி மூலம் சந்தேகிக்கப்படுவதாகவும், ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதால் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3psZxsY
via Read tamil news blog
0 Comments