Advertisement

Responsive Advertisement

”ஒமைக்ரானை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும்”- பிரதமர் மோடி

’’ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி’’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் உரைஉலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒமைக்ரானை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். குறிப்பாக “கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தற்போது நமது வீட்டு கதவையும் தட்டத் தொடங்கியிருப்பதால், அதனை வீழ்த்த பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை நாடு இழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் உயிர் தப்பியிருந்த குரூப் கேப்டன் வருண் சிங், மரணத்தை வெல்ல பல நாட்கள் போராடி இறுதியில் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

image

கடந்த ஆகஸ்ட் மாதம் சவுரிய சக்ரா விருது பெற்ற வருண் சிங், அதற்காக தனது பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது நெஞ்சத்தையும் கனக்க வைத்திருந்தது. எத்தனை உயரத்திற்கு சென்றாலும், ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக்கூடாது என்ற அவரது பண்பு போற்றுதலுக்குரியது” என்று பேசினார். தொடர்ந்து இந்திய கலாசாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், அதை பரப்பவும் வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் பேசினார்.

தொடர்புடைய செய்தி: ’’ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி’’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3en0Gwb
via Read tamil news blog

Post a Comment

0 Comments