Advertisement

Responsive Advertisement

சபரிமலை: தங்க அங்கியுடன் காட்சியளித்த ஐயப்பன் - விமரிசையாக நடைபெற்ற மண்டல பூஜை

சபரிமலையில் சரண கோஷம் முழங்க தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு மண்டல பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் ஐயப்பனை அழகு பார்க்க திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி கடந்த 22ஆம் தேதி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பல்வேறு கோயில்களில் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட தங்க அங்கி சனிக்கிழமை மாலை பம்பை வந்தடைந்தது. பம்பையில் இருந்து எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு சனிக்கிழமை மாலை மகாதீபாராதனை நடந்தது. வழக்கமான பூஜைகளுக்கு பின் சனிக்கிழமையன்று கோயிலில் நடை அடைக்கப்பட்டது.

image

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டு தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு காலை 11:50 மணியிலிருந்து மதியம் 01.15 மணிக்குள்ளான சுபமுகூர்த்தத்தில் மண்டல பூஜை நடந்தது. சரண கோஷம் முழங்க மண்டல பூஜையில் பங்கேற்ற ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மண்டல பூஜைக்கு பின் தொடர்ந்து நடக்கும் வழக்கமான பூஜைகளை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதோடு ஐயப்ப பக்தர்களின் நாற்பத்தி ஒரு நாட்கள் என்ற ஒரு மண்டல விரத காலம் நிறைவடைகிறது.

image

ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்படும் சபரிமலை நடை, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும். டிசம்பர் 30ஆம் தேதியும் ஜனவரி 20ஆம் தேதியும் பந்தள அரண்மனை குடும்பத்தினரின் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆச்சார சடங்குகள் நடப்பதால் அன்று பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை.

image

இடைப்பட்ட நாட்களில் வழக்கம் போல தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FwHtEb
via Read tamil news blog

Post a Comment

0 Comments