Advertisement

Responsive Advertisement

'இளைஞர்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்' - பிரதமர் மோடி

இளைஞர்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் தினமான நேற்று, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 14 சிறுமிகள் உள்ளிட்ட 29 பேருடன், தேசிய பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்ற சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என்றார்.

imageமேலும், உலகம் முழுவதும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதால் நாடே பெருமை கொள்கிறது என்றார். தூய்மை இந்தியா திட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் சிறுவர்கள், தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். பால புரஸ்கார் விருதுக்கு தேர்வான 29 பேருக்கும் சான்றிதழும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: பீகார்: குழந்தைகள் மீது துப்பாக்கியால் சுட முயற்சி? - பாஜக அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rQf5XZ
via Read tamil news blog

Post a Comment

0 Comments