Advertisement

Responsive Advertisement

விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி: பிரதமர் மோடி

விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதலமைச்சருக்கு நன்றி என்று பஞ்சாப் மாநில அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட பின்பு பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளிடம், “பத்திண்டா விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி" என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

image

பிரதமர் மோடி இன்று ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். அதற்காக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி செல்லவிருந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது, இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்வாயை விவசாயிகள் தடுத்ததால், பிரதமர் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டது, இதனால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

"மோசமான வானிலை காரணமாக பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டதால், சாலை மார்க்கமாக பயணிக்க காவல்துறை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக பஞ்சாப் டிஜிபி தெரிவித்ததை தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக பயணிக்கத் தொடங்கினார். ஆனால் பஞ்சாப் அரசு பாதுகாப்பை நிலைநிறுத்தத் தவறி விட்டது " என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது

image

பாதுகாப்பு குறைபாடு குற்றசாட்டுகளை மறுத்த பஞ்சாப் அரசின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ராஜ்குமார் வெர்கா,"பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பிரதமரின் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்ட பாஜக தலைவர்கள் தவறியதால் பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qMP0IR
via Read tamil news blog

Post a Comment

0 Comments