Advertisement

Responsive Advertisement

மீண்டும் தொடரும் மீனவர் கைது... அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்! அரசுகள் உதவ கோரிக்கை

ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இன்று கைப்பற்றியுள்ளனர் இலங்கை கடற்படையினர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், `இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துள்ளனர்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் இலங்கை கடற்படையினர்.

image

கடந்த 26 நாள்களில் மட்டும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 78 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதில் 21 பேர் மட்டுமே தற்போது வரை விடுதலையாகி உள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்து வருவதனால், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து கவலை அடைந்துள்ளனர். 

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்தி: "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு" - ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gYlkeJH
via Read tamil news blog

Post a Comment

0 Comments