Advertisement

Responsive Advertisement

ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் அந்நாட்டிடம் இருந்து இந்தியா பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது

உக்ரைனில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் மறைமுக பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ் 400 எனப்படும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தும் வான் பாதுகாப்பு சாதனங்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் முடிவடைந்து அவற்றின் 2ஆவது பிரிவு இந்தியாவுக்கு அனுப்பப்படவிருந்த சூழலில் ரஷ்யாவிற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Sanctions Intensify Russia's Free Fall Into Economic Crisis : Parallels : NPR

மேலும் கடற்படைக்கான ஏவுகணை செலுத்தும் வசதிகளுடன் கூடிய 4 சிறு கப்பல்களை வாங்குவதும் பாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடன் தற்போது 950 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இருந்தும் நெருக்கடி அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/GsA6LWY
via Read tamil news blog

Post a Comment

0 Comments