Advertisement

Responsive Advertisement

வானிலிருந்து விழுந்த உலோக வளைய மர்மப் பொருள்; சீன ராக்கெட்டின் எச்சங்கள் என கண்டுபிடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வானிலிருந்து தீப்பற்றி எரிந்தபடி விழுந்த மர்மப்பொருட்கள் “சீன ராக்கெட் ஒன்றின் எச்சங்கள்” என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் கிராமத்தில் இரவு நேரத்தில் வானத்தில் இருந்து தீப்பிடித்து எரிந்தபடி சில பொருட்கள் வந்து விழுந்தன. மறுநாள் காலை கிராமத்தின் பஞ்சாயத்து கட்டிடத்தின் பின்னால் விழுந்த 10x10 அடி உலோக வளையம் உட்பட பல பெரிய உலோகத் துண்டுகளை கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். வேற்றுகிரக வாசிகளின் பொருட்கள் விழுந்ததாக பீதி பரவியதும் மாவட்ட ஆட்சியர் அஜய் குல்ஹானே இதுபோன்ற பொருட்கள் விழுந்ததாக கூறப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி அவற்றை பரிசோதிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து உலோக வளையம், 1 முதல் 1.5 அடி விட்டம் கொண்ட சிலிண்டர் போன்ற பொருள் என பல பொருட்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிந்து விழுந்த பொருட்கள் அனைத்தும் சீன ராக்கெட் ஒன்றின் எச்சங்கள் என்பது தெரிய வந்துள்ளது. செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு ராக்கெட் பூஸ்டர்களின் துண்டுகளாக இவ்வாறு விழுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் தேவையற்ற பீதியை மக்கள் தவிர்க்க வேண்டுமென்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4eENbZP
via Read tamil news blog

Post a Comment

0 Comments