Advertisement

Responsive Advertisement

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி மலேசியாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 102. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில், ஜான்சி ராணி படைபிரிவில் பணியாற்றியவர் அஞ்சலை பொன்னுசாமி.

இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அஞ்சலை பொன்னுசாமியன் தீரம் எக்காலத்திற்கும் நினைவில் நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் உள்ள செந்நூல் நகரில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

image

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அஞ்சலை பொன்னுசாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வீரம், மன உறுதி, துணிச்சல் என பெண்குலத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் அஞ்சலையம்மாள்; அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... “தோல்வியை நினைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை”- தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/IE48OsK
via Read tamil news blog

Post a Comment

0 Comments