
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 17.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவில் பெட்ரோல், டீசலை அதிகளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பயன்பாடு கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் ஒரு கோடியே 86 லட்சம் டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் டீசல் விற்பனை 23.9 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 23.2 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளது பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pskK0jP
via Read tamil news blog
0 Comments