
அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய ரத சாகு தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சத்ய பிரத சாகு குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற தொகுதிகள் அளவில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக சிறப்பு முகாம்களை ஏற்படுத்த வேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், ஒருவேளை இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக் கூடாது எனவும் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ltgRipq
via Read tamil news blog
0 Comments