Advertisement

Responsive Advertisement

₹7 லட்சம் வேணுமா? ஜெயிலுக்கு போறியா? மும்பைவாசிக்கு செக் வைத்த சைபர் போலீஸ்; ஏன் தெரியுமா?

ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று செலான் பூர்த்தி செய்து அதனை பரிவர்த்தனைக்கு உட்படுத்தும் நிலை மாறி, இருந்த இடத்திலிருந்தே நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இதற்காக பல UPI தளங்களும் இயங்குகிறது.

இருப்பினும், இவ்வாறு பரிவர்த்தனை செய்யும் போது அவ்வப்போது பல மோசடிகளும், குளறுபடிகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக யாரோ ஒருவரது வங்கி கணக்கில் 7 லட்சம் ரூபாயை அனுப்பி பரிகொடுத்த சம்பவம் அண்மையில் அரங்கேறியிருக்கிறது.

image

மும்பையின் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர் கடந்த ஜூன் 29ம் தேதி உறவினர் ஒருவருக்கு தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் அனுப்ப இருந்தார். ஆனால் அக்கவுண்ட் நம்பரை தவறாக இட்டதில் அந்த தொகை வேறொருவரது கணக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனையறிந்த அப்பெண் உடனடியாக வங்கிக்கே சென்று நடந்ததை தெரிவித்த போது, வங்கியில் உள்ளவர்களோ, இது உங்கள் தவறு எங்களால் எதுவும் செய்யமுடியாது என எந்த உதவியும் புரியாமல் கைவிரித்திருக்கிறது.

வேறு வழியின்றி பணத்தை இழந்த அப்பெண் வசைவிஹாரில் உள்ள சைபர் க்ரைம் போலீசாரை நாடியிருக்கிறார். அங்கு அவரது புகாரை ஏற்றுக்கொண்ட சைபர் போலீசார், பணத்தை பெற்றவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

ALSO READ: 

மளிகை கடை வியாபாரி டூ உலகம் சுற்றும் கேரளத்து பெண்.. யார் இந்த மோலி ஜாய்?

அதற்கு அந்த நபரோ தனக்கு லாட்டரியில் வந்த பணம் அது. என்னால் தர முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பணத்தை அப்பெண்ணிடம் தரவில்லையென்றால், மோசடி வழக்கில் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, கடந்த ஜூலை 2ம்ம் தேதி சிறை வாசத்துக்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கிற்கு அந்த நபர் பணத்தை செலுத்தியிருக்கிறார். இதனிடையே, பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் கவனமாக கையாள வேண்டும் என சைபர் போலீசார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ygi9Cha
via Read tamil news blog

Post a Comment

0 Comments