Advertisement

Responsive Advertisement

”லீவுக்காக பயணிகளிடம் உதவி கேட்ட நபர்” - எப்படி தெரியுமா? மும்பையில் நடந்த சுவாரஸ்யம்!

விடுமுறைக்காக பள்ளி கல்லூரிக்கு செல்வோரை காட்டிலும் எக்கச்சக்கமான சாக்குப்போக்குகளை சொல்வதில் அலுவலக பணியாளர்களே கெட்டி என்பது ரெடிட் தளத்தில் ஷேர் செய்யப்பட்ட வைரல் போஸ்ட் மூலம் அறியலாம்.

மும்பை மற்றும் புனேவில் ட்ரெயின், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கான சரியான நேரத்தை குறிக்கும் அப்ளிகேஷன்தான் M-Indicator. இந்த ஆப்பை பயன்படுத்துவதால், தங்களுடைய நேரத்தை அதற்கேற்றால் போல பயணிகள் மேனேஜ் செய்து கொள்கிறார்கள்.

image

அப்படிப்பட்ட அந்த m-indicator ஆப்பை பயன்படுத்தி ஊழியர் ஒருவர் தனக்கான லீவை பாஸிடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

மும்பை முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், அலுவலகம் செல்வதை தவிர்ப்பதற்காக எப்படியாவது லீவ் பெறுவதற்காக, மாயநகரி பகுதியைச் சேர்ந்த பிரையன் மிரண்டா என்ற நபர் ஒருவர் m-indicator ஆப் சாட் பாக்ஸில் “என்னுடைய பாஸுக்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பனும். அதனால கூர்கானை தாண்டி ட்ரெயின் சேவை இருக்கா?” எனக் கேட்டிருக்கிறார்.

பொதுவெளியில் இதனை பிரையன் மெசேஜை கண்ட முகம் தெரியாத பலரும், அவரது தேவையை புரிந்துகொண்டு “இல்லை ட்ரெயின் சேவை இல்லை, கூர்கானுக்கு பிறகு எந்த ரயிலும் இயங்கவில்லை” என சொல்லி வைத்தார் போலவே அனைவரும் பதிலளித்திருக்கிறார்கள்.

சிறிது நேரத்திலேயே பிரையன் மிரண்டா, “ரொம்ப நன்றி நண்பர்களே. வார விடுப்பு வாங்கிட்டேன்” என பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட்தான் தற்போது ரெடிட் தளத்தை தாண்டி ட்விட்டர், இன்ஸ்டாவிலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

‘பிரச்னைனு ஒன்னு வந்தா ஒன்றுபட்டு நிற்போம்’ என்பதற்கு இந்த பதிவு உதாரணம் என பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/74MDzwS
via Read tamil news blog

Post a Comment

0 Comments