Advertisement

Responsive Advertisement

`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!

இந்தியாவையே கட்டிப்போட்டு வைத்திருக்கிற உணவு அது. புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவர் ஆர்டர் செய்யும் உணவு அது. ஒரு நிமிடத்துக்கு குறைந்தபட்சம் 90 முதல் 115 வரை ஆர்டராவது பதிவாகும். அட என்னப்பா அது என்கின்றீர்களா? இப்போ இந்த நிமிஷம் சொன்னாகூட உங்களுக்கு பசி எடுக்கும் உணவான பிரியாணி தாங்க அது!

கொண்டாட்டமோ துக்கமோ, நள்ளிரவோ அதிகாலையோ, சந்தோஷமா, சோகமோ... பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுவது என்பது இன்றைய இளைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்படி காரணமே இல்லாம, எல்லா காரணத்துக்கும் கொண்டாடப்படுற பிரியாணியையே, கொண்டாடவேண்டிய நாள் தான் இது! ஏன்னா... இன்னிக்கு (ஜூலை 3) உலக பிரியாணி தினம்!

image

`இந்தப் பொறப்புதான்... நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது; அத நெனச்சுதான் மனம் உலகம் முழுவதும் பறக்குது...’ என்ற பாட்டை கேட்கும்போதெல்லாம் நம் மனம் லேசாகும். உடனே ஒரு ருசியான உணவை மனம் தேடும். நள்ளிரவு நேரமோ அதிகாலையோ... எப்போதாக இருந்தாலும் உடனே நாம் ஒரு உணவை யோசிக்காமல் ஆர்டர் செய்வோம். அதுதான் பிரியாணி! கல்யாணம், காதுகுத்து, கிடா வெட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி துக்க நிகழ்வுகள் வரை இந்தியாவின் அனைத்து சூழல்களிலும் இன்றைய தேதிக்கு பிரியாணி சமைக்கவும் சாப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.

image

பிரியாணி என்ற வார்த்தை, வறுத்த என்ற பாரசீக சொல்லில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பாரசீகத்தில் தோன்றி, அதன்பிறகு அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அரேபிய வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கும், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பிரியாணி வந்திருக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, அப்படியே அதன் சமைக்கும் முறையும் மருவி, இன்று நாம் சாப்பிடும் பிரியாணி உருவானது. இப்படி இந்தியாவிலேயே உருவாகிய காரணத்தினாலேயே, ஒவ்வொரு மாநிலத்தின் பிரியாணியும் ஒவ்வொரு டேஸ்ட்டில், ஒவ்வொரு வகையில் இருக்கும்.

image

பெரிய முதலீடு மற்றும் 'ரிஸ்க்' இல்லாத காரணத்தாலேயே, இந்த தொழிலை செய்ய முன்வருவதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே சென்னை போன்ற பெருநகரங்களில், இரவு 2 மணிக்கு கூட சுடச்சுட பிரியாணி கிடைக்கிறது. சென்னையில் கோடம்பாக்கம், புளியந்தோப்பு பகுதிகளில் இரவு நேர பிரியாணிக் கடைகளில் வியாபாரம் சூடு பறக்கிறது. ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை 100 ரூபாய்க்கு விற்றாலும் அது நல்ல லாபம் தான் என்கிறார்கள், வியாபாரிகள். சென்னையில் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அம்பத்துார், ஆவடி, பல்லாவரம், சாலிகிராமம் போன்ற பகுதிகளில் மட்டும் 800 பேர் பிரியாணி தயார் செய்கின்றனர்.

image

இப்படி நீங்கள் பார்த்த, ருசித்த பிரியாணிகளில் உங்களுக்கு பிடித்த டேஸ்ட் எந்த ஸ்டேட்டின் பிரியாணி? எந்த ஏரியாவின் பிரியாணி உங்களுக்கு பிடிக்கும்? பிடித்த பிரியாணி வகை எது என்பதையெல்லாம் கீழ்க்காணும் லிங்க் மூலமாக எங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UqmcOYf
via Read tamil news blog

Post a Comment

0 Comments